வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice

1,214,255
0
Published 2024-05-21
#velmaral #வேல்மாறல் #வேல் #vel
கீழே உள்ள லிங்க்-ல் வேல் மாறல் தொகுப்பு தரப்பட்டுள்ளது. Click the below link for Vel Maral
drive.google.com/file/d/1_BD4SJ8zLQgv5D4jd071_wDqW…

வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi
   • வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை |...  

- Athma Gnana Maiyam

All Comments (21)
  • @Shivam65756
    மிக்க நன்றி அம்மா 🙏 நான் கடந்த 48 நாட்கள் மிகுந்த நம்பிக்கையுடன் வேல் மாறல் மகா மந்திரம் பாராயணம் செய்து வந்தேன்.. முருகப்பெருமானின் அருளால் எனக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் எனது அனுபவத்திற்கு ஏற்ப தகுந்த வேலை ஷஷ்டி விரத்திருநாளில் (11th June 2024) கிடைத்து விட்டது 🙏🙏 மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏 என் வாழ்நாள் முழுவதும் நான் வேல் மாறல் மகா மந்திரம் பாராயணம் செய்து இந்த உலகில் உள்ள அனைத்து பக்தர்களும் அவர்கள் கவலைகள் தீர அவர்கள் வேண்டும் வரம் கிடைக்க முருகப்பெருமானின் அருள் கிடைக்க பிராத்தனை செய்வேன் 💐💐 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏❤️
  • @amudhadt6139
    அம்மா நான் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேல் மாறல் பாடலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒலிக்க வைத்தேன். இன்று காலை முருகன் (மயில்) எங்கள் வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து இளைப்பாறிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. நன்றி தாயே.
  • மிகவும்...நன்றி...மா...நான் நேற்று முழுக்க....வேறு u tube chanell பார்த்து எழுதினேன்.....ஆனால்...அதிசயம்.....காலையில் சாமி கும்பிடும் போது....நோட்டும் ....பக்கத்தில் தான் இருந்தது.....எதேட்சையாக போனை ...எடுத்தேன்...வேல் மாறல்....உங்கள் குரலில்....மிகவும் சுலபமாக படித்தேன்....முதல்முறையாக....நன்றிகள் கோடி....தாயே....ஓம் சரவண பவ🙏
  • @Devi-tq5se
    மேடம் எனக்கு ரொம்ப ரொம்ப வேல்மாரல் படிக்க ஆசை ஆனால் படிக்க தெரிய வில்லை.... உங்களின் அருளோடு இபொது தெரிந்து கொண்டேன்.... எந்தை என் தந்தை முருக பெருமானுக்கும் கோடி நன்றிகள்.... கோளாறு பதிகமும் உங்களின் ஆசியோடு கற்று கொண்டேன்... தங்களின் மாணவி நான் குருவே
  • அம்மா நான் நேற்று வேல்மறல் படிக்கும் போது கொஞ்சம் புரியாமல் படித்தது மாதிரி இருந்தது என்ன செய்வது எப்படி யாரிடம் கேட்பது என்று புரியாமல் இருந்தேன் ஆனால் இன்று நீங்க இந்த வீடியோ போட்டது.... முருகனே எனக்கு சொல்லியாது போல் இருக்கு 🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா
  • அம்மா இந்த வைகாசி விசாகத்தில் உங்கள் குரலைக் கேட்டு நாங்கள் உள்ளம் மகிழ்ந்தோம் அம்மா வேல்மாறல் நீங்கள் அழகாக படித்தீர்கள் அம்மா
  • இன்று முதல் வேல் மாறல் படிக்க ஆரமித்து உள்ளேன். கஷ்டங்கள் நீங்க நிம்மதியான வாழ்க்கை வாழ முருகன் அருள் புரிய வேண்டும். ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
  • @user-xq6yv3pe8h
    மிக்க நன்றி அம்மா இன்று செவ்வாய் கிழமை நானும் என் மகளும் இன்று வேல் மாறல் படிக்க தொடங்கி விட்டோம் 48 நாளும் படித்து முடிக்க முருகன் துணை இருக்க வேண்டுகிறோம் 🙏🏻
  • @satishkumarm4664
    இன்று தான் வேல் வகுப்பு பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். முருகா சரியாக படிக்க வழிகாட்டு என வேண்டி கோவிலுக்கு சென்று வந்தேன். இந்த பதிவை பார்த்தேன். காந்த சக்தியாக உள்ள கந்தனுக்கும் தங்களுக்கும் நன்றி
  • @user-xb6cw8vn9y
    அம்மா வணக்கம்............ கோடான கோடி நன்றிகள் உங்கள் குரலில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு. வைகாசி விசாக இத்திருநாளில் அனைவருக்கும் பரிசாக வழங்கி விட்டீர்கள்... ❤❤❤
  • மிக்க நன்றி அம்மா இன்று தான் நான் வேல் மாறல் பூஜை ஆரம்பித்து இருக்கிறேன் எப்படி படிப்பது என்று ஒரு தயக்கம் அந்த முருகரே உங்கள் ரூபத்தில் எனக்கு வழிகாட்டியதாக உணர்கிறேன் மிக்க நன்றி
  • @raniks5043
    🙏🙏🙏🙏🙏 இன்று முதல் சொல்ல ஆரம்பித்து உள்ளேன் .என் விருப்பங்களை மிக விரைவாக நிறைவேற்றித் தாங்க முருகப் பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
  • @6a17mugulss2
    என் குருவுக்கு வணக்கம் இப்போது தான் வைகாசி விசாக வழிபாடு செய்து முடித்தேன் இந்த நாளில் இந்த பதிவை கேட்க கொடுத்து வைத்துள்ளேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
  • @divyabalu8816
    மிக்க நன்றி அம்மா... முருகப்பெருமனுக்கு உகந்த இந்த நன்னாளில் இந்த பதிகத்தை உங்கள் குரலில் கேட்டது இந்த நாளில் எங்களுக்கு கிடைத்த சிறப்பு 🙏🙏🙏
  • @gayathriasokan52
    நன்றி அம்மா 💐💐💐🙏🙏🙏. நேற்று இரவு தான் "அம்மா எப்ப வேல் மாறல் சொல்லப் போறாங்கனு தெரியலையே" னு நினைத்தேன், இன்று காலை உங்கள் பதிவு. அப்ப நீங்க இறைவன் அனுப்பிய தேவதை தன!!!. அம்மா உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு முருகன் அல்லது சிவபெருமான் அல்லது அம்பாள் அல்லது  ஒரு தெய்வம் காட்சி கொடுத்திருப்பார்கள் அல்லது அற்புதங்களை நிகழ்த்தி இருப்பார்கள்.  அப்படிப்பட்ட  உங்கள் அனுபவங்களை  நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் விரும்பி கேட்டு கொள்கிறேன். இப்படிக்கு உங்கள் மாணவி காயத்ரி 😊
  • @deepuraj5535
    100% சதவீதம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, வெற்றியை தரும். வேல் மாரல்
  • @tnpscgroup4351
    Amma romba nandri ❤... Endru muthal Naa 48 naal Yan appan murugan ku viratham irukiran... ❤❤❤❤
  • அம்மா வணக்கம்உங்கள் குரலில் வேல் மாறல் கேட்பது மிக அருமையாக உள்ளது. பிறர் பாடுவது எல்லாம் வேல் மாறல் புரியவில்லை. தாங்கள் உரை நடையில் பாடுவது மிக அருமையாக உள்ளது. வாரியார் சாமிகளின் சிஷ்யயை
  • சகோதரியின் குரலில் ஒலிக்கும் வேல் மாறல் மகா மந்திரம் இணைந்து படிக்க சுலபமாக உள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோஹரா
  • @Arunraj-vn8ne
    முருகா 🙏🙏🙏 என் வயிற்றில் கரு தங்கி இருக்கணும் முருகா எனக்கு positive வரணும் முருகா...